குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான உறவுகள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் நினைவு வார ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது
*ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப் படைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்டனர்
*தமிழ் இனப் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் 18 5 2019
*தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும்
* கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி விசாரணை செய்
*தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்
*ஆயுதப்படைகளே எமது காணிகளை விட்டு வெளியேறு
*பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப்பெறு
* ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து
* தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்து
உள்ளிட்ட கோரிக்கைகளோடு தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் மே 12 முதல் மே 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது
தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தினுடைய ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவில் கொள்ளப்பட்டது
இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டியைஜா புவனேஸ்வரன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்
#mullivaikal #sivajilingam #Tamilmassacre