நாடளாவிய ரீதியில் இன்று (14) இரவு 9 மணி முதல் நாளை (15.05.19) அதிகாலை 4 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கம்பஹா காவற்துறைப் பிரிவில் இன்று (14.05.19) இரவு 7 மணி முதல் நாளை (15.05.19) காலை 6 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில் காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட மேல் மாகாணத்தில் அமுலில் இருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் மாலை 04 மணிக்கு விலக்கப்பட்டு, மீண்டும் மாலை 06 மணிக்கு அமுலிற்கு வந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அப்பிரதேசத்தில் நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில் காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #curfewimposed #srilanka