ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் மூன்று முக்கிய நிர்வாகிகள் பதவி விலகியுள்ளனர். நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எவ்வித அறிகுறிகளும் தென்படாத நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி வினய் டூபே, இணை தலைமை செயலதிகாரி அமித் அகர்வால், தலைமை செய்தித்தொடர்பு அதிகாரி ராகுல் தனேஜா ஆகியோரே நேற்று இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எடிஹாட் நிறுவனம் கூடுதல் முதலீடு செய்ய திட்டமிட்ட போதிலும் அந்தத் தொகை போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் நிர்வாகிகளுக்குக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் இவ்வாறு பதவிவிலகியுள்ளனர்.
இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தலைமை செயலதிகாரிகள் இருவர் சொந்த காரணங்களுக்காகப் பதவி விலகியுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
#jetairways #resign #ஜெட்ஏர்வேஸ் #நிர்வாகிகள் #பதவிவிலகல்