ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் ரபெல் நடாலும், பெண்கள் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவாவும் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளனர்.
நேற்றையதினம் நடைபெற்ற ஆண்கள் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான செர்பியா நாட்டின் நோவக் ஜோகோவிச்சும் 2-ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடாலும் போட்டியிட்ட நிலையில் நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வென்று 9-வது முறையாக இந்த கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.
அதேவேளை பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் செக்குடியிரசின் கரோலினா பிளிஸ்கோவா இங்கிலாந்தின் ஜொஹன்னா கோன்டாவை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.
1978-ம் ஆண்டுக்கு பின்னர் செக்குடியரசு வீராங்கனை ஒருவர் இந்த கிண்ணத்தினைக் கைப்பற்றுவது இது முதல் முறை என்பதுர்டன் பிளிஸ்கோவா கைப்பற்றிய 13-வது சர்வதேச கிண்ணமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
#italyopentennis #nadal #carolinaPliskovaa #champions