பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தனது பதவிவிலகுவதாக இன்று அறிவித்துள்ளார். ஐNருhப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிற் தொடர்பான ஒப்பந்தத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டதனையடுத்து அது தொடர்பான ஒப்பந்தம் பாராளுமன்றல் 3 முறை தோல்வியடைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து சில அமைச்சர்கள் பதவிவிலகியதனையடுத்து ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ள தெரேசா மே, எதிர்வரும் ஜூன் 3ம் திகதி நான்காவது முறையாக வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருந்தார். இந்த வாக்கெடுப்பும் தோல்யடைந்தால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரேசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த பொதுமக்கள் சபையின் தலைவர் அன்ட்ரியா லீட்ஸம் பதவிவிலகியிருந்தார். இதனையடுத்து பிரதமர் பதவி மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து தெரேசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் அதிகரித்து வந்துள்ள நிலையில் அவர் எதிர்வரும் ஜூன் மாதம் 7-ம் திகதி கனசர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
லண்டன் டவுனிங் தெருவில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நாட்டின் பிரதமராக இருமுறை பணியாற்ற கிடைத்த வாய்ப்பை தனது வாழ்நாளின் கௌரவமாக கருதுகிறேன் எனவும் எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#தெரேசா மே # பதவிவிலகுவதாக #பிரித்தானிய #uk #resign #theresa may #brexit