Home இலங்கைசீனா விதித்திருந்த தடையில் தளர்வு

சீனா விதித்திருந்த தடையில் தளர்வு

by admin


உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து சீனப்பிரஜைகள் சுற்றுலாவுக்கென இலங்கைக்கு பயணம் செய்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் இலங்கைக்கான சீன தூவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறு சீனா முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது இவ்வாறு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் சீனப் பிரஜைகளை அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#சீனா   #தடை #உயிர்த்த ஞாயிறு #eastersundaylk #srilanka  #china

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More