உத்தரபிரதேச மாநிலத்தில் 3 சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவர்களது உடல்கள் ஒரு ஆழ்துளை கிணறு அருகே காணப்பட்டதாகவும் ஒவ்வொருவர் உடலிலும் தலா 2 குண்டுகள் துளைத்த காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட 3 பைசலாபாத் நகரை சேர்ந்த அஸ்மா, அலீம், அப்துல்லா எனவும் அவர்கள் அருகருகே வசித்து வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
9 வயது முதல் 11 வயது வரை உள்ள அவர்களை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை என அவர்களது பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்த போதுமட் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடமை தவறிய 3 காவல்துறையினரை பணிநீக்கம் செய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
#உத்தரபிரதேச #சிறுவர்கள் #சுட்டுக்கொலை