Home இலங்கைவறட்சியினால் கிளிநொச்சியில்; 2738 குடும்பங்களும் முல்லைத்தீவில் குடும்பங்களும் பாதிப்பு

வறட்சியினால் கிளிநொச்சியில்; 2738 குடும்பங்களும் முல்லைத்தீவில் குடும்பங்களும் பாதிப்பு

by admin


வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடும்பங்களைச் சேர்ந்த 40093 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில்; கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றதுடன் இந்தப்பகுதிகளில் வாழ்வாதாரச்செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவப்பிரிவினுடைய தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவபை;பிரதேச செயலாளர் பிரிவில்; 130 குடும்பங்கசை;சேர்ந்த 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பூநகரிப்பிரதேசசெயலாளர் பிரிவில் 2068 குடும்பங்களைச்சேர்ந்த 8679 பேர் பாதிக்கப்;பட்டிருப்பதாக குறிபபிடப்பட்டுள்ளது. இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கரைதுரைப்பற்று, ஆகிய பிரதேச செயலர் பிரிவுகள் வறட்சியினால் பாதிக்கப்படடிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் 1967 குடும்பங்;களைச்சேர்ந்த 6296 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று கரைதுறை பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 10790 குடும்பங்களைச்சேர்ந்த 33797 பேர் பாதிக்கப்படடிருப்பதாக தகவல் இடப்படடிருப்பின்றது

இவ்வாறு நிலவும் வறட்சி காரணமாக முல்லைத்தீவு 12766 குடும்பங்களைச்சேரந்த 40093பேரும் கிளிநொச்சி மாவட்;டத்தில் 2738 குடும்பங்களைச்சேர்ந்த 9082 பேரும பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால தெரிவிக்கப்பட்டுள்ளது.

#வறட்சி  #கிளிநொச்சி #முல்லைத்தீவு  #குடும்பங்கள் #பாதிப்பு #kilinochchi #mullaitheevu #drought

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More