Home இலங்கை5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..

5 அரச நிறுவன பிரதானிகள், பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகின்றனர்..

by admin


5 அரச நிறுவன பிரதானிகளை கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பற்றிக்கலோ கம்பஸ் தனியார் நிறுவனம் குறித்த அறிக்கையை தயாரித்தல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முதலீட்டு சபை,இலங்கை வங்கி, மத்திய வங்கி,நிறுவனங்களை பதிவு செய்யும் பதிவாளர் அலுவலகம் ,உயர் கல்வியமைச்சு முதலான நிறுவனங்கள் இன்றைய அமர்வில் முன்னிலையாகின்னறன. இந்த நிறுவனங்களிடம், இது தொடர்பில் எழுந்துள்ள சந்தெகங்கள் தொடர்பில் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More