Home இலங்கைவடமாகாணத்தில் அனைத்து சித்த வைத்திய நிலையங்களிலும் வர்ம சிகிச்சை முறை

வடமாகாணத்தில் அனைத்து சித்த வைத்திய நிலையங்களிலும் வர்ம சிகிச்சை முறை

by admin


வடமாகாணத்தில் உள்ள அனைத்து சித்த வைத்திய நிலையங்களிலும் வர்ம சிகிச்சை முறையை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் தெரிவித்தது.

நரம்பு , எலும்பு சார்ந்த செயற்படாத உடற்பாகங்களை தூண்டல் மூலம் குணப்படுத்தும் ஒரு சித்த வைத்திய முறைமையே வர்ம சிகிச்சை எனப்படுகின்றது. வடமாகாணத்தில் உள்ள 13 சித்த வைத்திய நிலையங்களில் 8 வகையான சித்த வைத்திய சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. யோக , அக்கு பஞ்சர் உள்ளிட்ட இந்த எட்டு வகையான சிகிச்சை முறைகள் மூலம் அகம் மற்றும் புற ரீதியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இதுவரையான கால பகுதியில் வர்ம சிகிச்சை யாழ்.மாவட்டத்தில் ஒரு வைத்திய சாலையில் மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றன. அந்நிலையில் இந்த சிகிச்சை முறையை வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள சித்த வைத்திய சாலையில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

அதற்கு சிறப்பு பயிற்சிகள் தேவைப்பட்டமையால் இந்தியாவில் இருந்து துறை சார்ந்த நிபுணர்களை அழைத்து வடமாகாணத்தில் சுமார் 40 சித்த வைத்தியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வடமாகாணத்தில் உள்ள அணைத்து சித்த வைத்திய சாலைகளிலும் வர்ம சிகிச்சைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன

 #சித்த வைத்திய #வடமாகாணத்தில்  #வர்ம சிகிச்சை

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More