தமிழர் இருப்புக்கான தொன்மையையும் தொடர்பை ஆராய்தல் மற்றும் அவற்றை பாதுகாப்பதற்கான ஆராய்வுகளை மேற்கொள்ளும் உரையாடல் ஒன்று நாளை சனிக்கிழமை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலையின் கன்னியா பீலியடியில் உள்ள தென்கலை ஆதீனத்தில் தவத்திரு அகத்தியார் அடிகளாரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் கிண்ணியாவின் தொன்மை வரலாறு என்ற தலைப்பில் ஊடகவியலாளர் திருமலை நவம் உரையாற்றுகிறார்.
வரலாற்று ஆய்வாளர் செந்தூரன் காளிராசா தமிழர் வழிபாடு என்ற தலைப்பிலும் கன்னியாவில் சிதைவை ஊக்குவித்த காரணிகளும் தடுக்கும் தந்திரோபாய வழிமுறைகளும் என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வாளர் சற்குணம் சத்தியதேவன் ஆய்வுகளை நிகழ்த்த உள்ளனர்.
கன்னியாவை சில பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமிப்புக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தென்கலை ஆதினம் இந்த உரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இது நிகழ்வில் கலந்துகொண்டு ஆரோக்கியமான கருத்துக்களை முன் வைத்து கன்னியாவை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #தமிழர்இருப்பு #திருகோணமலை #கன்னியா