Home பிரதான செய்திகள்பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – நடால் – பெடரர் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – நடால் – பெடரர் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

by admin

பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மற்றும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் நோர்வே நாட்டை சேர்ந்த காஸ்பெர் ரூட்டுடன் போட்டியிட்ட நிலையில் பெடரர் 6–3, 6–1, 7–6 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்

அதேவேளை , மற்றொரு போட்டியில்; ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடால், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த டேவிட் கோபினுடன் போட்டியிட்ட நிலையில்; 6-1, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ; நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்

#பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்  # ரபெல் நடால்  #பெடரர் #Roger Federer #Rafael Nadal

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More