வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தற்போது இல்லாமையினால், முதலமைச்சரும், அமைச்சர்களும் நானே என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வட மாகாண தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் யார் ஆட்சிக்கு வந்தாலும், யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து லட்சம் மக்களின் வாக்குகளிலேயே அவர்களுக்கு கண் என தெரிவித்துள்ள அவர், இங்குள்ள மக்களின் நலனில் எந்தவிதமான அக்கறையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்
மேலும் வெளிநாட்டில், நாடு கடந்த அரசாங்கம் நடாத்தும் ஒருவர் இங்குள்ள விடயங்களை கிண்டிக் கொண்டிருப்பதாகவும், என்ன நடந்தாலும் ஐ.நாவுக்கு ஓடிச் சென்று முறையிடுவதாகவும் தெரிவித்த அவர் அவருக்குப் பின்னால், இங்குள்ள சில சட்டத்தரணிகளும் செல்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கிணறுகளில் எடுக்கும் தண்ணீருக்காக கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அதற்காக நீர்வாசிப்புமானி பொருத்தப்படும் எனவும் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சுகாதரத் துறை பணிமனை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
#வடமாகாணசபை #வட மாகாணஆளுநர் #சுரேன்ராகவன்