Home உலகம் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களை வழங்க வேண்டும்

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களை வழங்க வேண்டும்

by admin


அமெரிக்க அரசின் புதிய விதிமுறைகளின்படி, அந்நாட்டிற்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இனி தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களை வழங்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களோடு, கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களையும் வழங்க வேண்டும் என அந்த புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தவருடம் மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய விதிமுறைகளின் காரணமாக ஓரு வருடத்துக்கு 14.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அரச ரீதியான மற்றும் உத்தியோகபூர்வ விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

#அமெரிக்க விசா  #விண்ணப்பிப்பவர்கள் #சமூக ஊடக #மின்னஞ்சல் #us visa

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More