ருமேனியாவுக்கு பயணம் மேற்கொண்ட பாப்பாண்டவர் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் சார்பாக ரோமா மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் ருமேனிய பயணத்தின் கடைசி நாளில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வரலாற்றில் பாகுபாட்டோடும், தவறாகவும், சந்தேகத்துடன் நடத்திய தருணங்களுக்காக மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்
பல நூற்றாண்டுகளாக ரோமா மக்கள் ஐரோப்பாவில் சித்ரவதைகளை அனுபவித்து வந்துள்ளதுடன் யூத இன படுகொலையின்போது, லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. தற்போது ஐரோப்பாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வாழ்கின்ற ரோமா மக்கள் அவர்கள் மீது காட்டப்படும் பாகுபாடு காரணமாக வேலை கிடைக்காமல் வாழ்வதற்கு போராடி வறுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருச்சபையின் சார்பாகவும், கடவுளின் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் உங்களின் மன்னிப்பை வேண்டுகிறேன் என்று பாபபாண்டவர்; பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்
மக்களை அலட்சியமாக நடத்துவது தவறான அபிப்ராயத்தை உருவாக்குகிறது எனவும் கோபத்தையும், மனவருத்தத்தையும் வளர்க்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Pope Francis # Roma community #ரோமா மக்களிடம் #மன்னிப்பு #பாப்பாண்டவர்