அமெரிக்கா – பிரித்தானிய கூட்டணி தான் உலகத்தில் எப்போதும் அறியப்பட்ட ஒரு மிகச்சிறந்த கூட்டணி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு மூன்று நாட்கள் அரந முறை பயணமாக சென்றுள்ள டிரம்ப் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உடன் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதும் தனித்துவமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் காத்திருக்கிறது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் தெரேசா மே தன்னைவிட பேச்சுவார்த்தை நடத்துவதில் சிறந்தவர் என தெரிவித்துள்ள அவர் தற்போதைய சூழலில் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் மே சிறப்பாக செயல்பட்டு வருகிறார் எனவும் நிச்சயமாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் வாய்ப்பு இருக்கிறது எனவும் பிரித்தானியா தனது அடையாளத்தை விரும்புகிறது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவில் தமது வருகைக்கு எதிராக போராடுபவர்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர் அதெல்லாம் சிறு குழுக்கள் மற்றும் போலி செய்திகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். #அமெரிக்கா #பிரித்தானியா #டொனால்ட்டிரம்ப் #தெரேசாமே #ஐரோப்பியஒன்றியம்