Home இலங்கையாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பதவி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது….

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பதவி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது….

by admin

யாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதானா வைத்தியசலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுனர் அலுவலகம் வைத்தியர் சத்தியமூர்த்தியை  யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடர முடியாதென்றும் முன்னைய நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர்  தங்களது இந்த நியமனம் சரியானதென்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி  தொடர்வார் எனவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பின் படியும் வைத்தியர்களுக்கான சேவைப்பிரமாணகுறிப்பின் படியும் அண்மையில் வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட சுகாதார நியதிச்சட்டத்தின் அடிப்படையிலும் வைத்தியர்களுக்கான நியமனம் மத்திய அமைச்சிற்குரியதென்றும் தெரியப்படுத்தியுள்ளார். இதன் மூலம் வைத்தியர் சத்தியமூர்த்தி   யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடர்வார் என்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. #யாழ்மாவட்டசுகாதாரசேவைகள்பணிப்பாளர். #வைத்தியர்சத்தியமூர்த்தி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More