வடக்கு ஜெர்மனியில் இரு வேறு மருத்துவமனைகளில் 85 நோயாளிகளை கொலை செய்த ஆண் தாதி ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்காத அளவுக்கு அதிக சக்தி கொண்ட மருந்தை கொடுத்து கொன்றதாக ஜெர்மனியை சேர்ந்த 42 வயதான ஆண் தாதியான நீல்ஸ் ஹேஜெல் என்பபருக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் என்ற மருத்துவமனையில் நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது இவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
ஹோகெல் ஏற்கனவே அவர் செய்த இரண்டு கொலைகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 1999ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரை தமது நோயாளிகளுக்கு இதய நோய் தொடர்பான மருந்துகள் கொடுப்பதை நிர்வகித்து வந்த நிலையிலேயே இவ்வாறு கொலைகளை அவர் மேற்கொண்டுள்ளார் ஹோகெல், தாம் செய்த செயலுக்காக இறந்தவர்களின் குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஜெர்மனியில் உலகப் போருக்கு பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. #ஆயுள்தண்டனை #நீல்ஸ்ஹேஜெல் #வடக்குஜெர்மனி