பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின்; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 12-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடாலும் 4-ம் நிலை வீரரான ஒஸ்ரியாவின் டொமினிக் திம்மும் போட்டியிட்ட நிலையில் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று நடால் 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு கிராண்ட்ஸ்லாம் கிண்ணத்தினை அதிக முறை கைப்பற்றிய நபர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு அவுஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட் அவுஸ்திரேலிய ஓபனை 11 முறை வென்றதே அதிகபட்சமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது
#பிரெஞ்ச் ஓபன் #சம்பியன் #நடால் #சாதனை #french open