மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, கனடா அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் இவ்வாறு தடை விதிக்கவுள்ளதாக அந்நாட்டப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளில் கடந்த ஆண்டு இதேபோன்ற சட்டம் இயற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பானது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சவால் எனவும் தெரிவித்துள்ளார்.
மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ள போதிலும், பிளாஸ்டிக் பைகள், ஸ்ரோ, பிளாஸ்டிக் தட்டுக்கள் போன்ற பொருட்களுக்கும் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிளாஸ்டிக் பாவனையைக் குறைத்தல் மற்றும் அவை கடலில் சேர்வதைத் தவிர்த்தல் தொடர்பில் சுமார் 180 நாடுகள் கடந்த மாதம் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இவ்வாறாகக் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#மீள்சுழற்சி #பிளாஸ்டிக் பொருட்களுக்கு #கனடா #தடை #ஜஸ்டின் ட்ருடியூ #non recyclable #plastic materials