Home இலங்கைவவுனியா மாவட்டத்தில் தொடர்வறட்சி – 109 பேர் பாதிப்பு

வவுனியா மாவட்டத்தில் தொடர்வறட்சி – 109 பேர் பாதிப்பு

by admin

வவுனியா மாவட்டத்தில் நிலவும் தொடர்வறட்சி காரணமாக நாற்பது குடும்பங்களைச்சேர்ந்த 109 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவப்பிரிவின் இன்றைய(11-06-2019) தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக வடமாகாணத்தில் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் நிலவும் கடுமையானவறட்சி காரணமாக வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் இதுவரை நாற்பது குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பன்னிரண்டாயித்து 768 குடும்பங்களைச்சேர்ந்த 40 ஆயிரத்து 98 பேரும் மன்னார் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 243 குடும்பங்களைச்சேர்ந்த 56 ஆயிரத்து 324 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 4771 குடும்பங்களச்சேர்ந்த 16ஆயிரத்து 636 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவப்பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#வவுனியா #வறட்சி  #குடும்பங்கள் #பாதிப்பு  #வடமாகாணத்தில்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More