Home இலங்கைதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு :

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு :

by admin

திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. ஆகவே எந்த இடத்திலும் எவரையும் நான் குற்றம் கூறுவதாக இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி . விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்ட அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் நீங்கள் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட தயார் என எழுதிய கடிதத்தை அவர்கள் பகிரங்கமாக ஊடகங்களில் வெளிப்படுத்தியது தொடர்பில் தங்களின் கருத்து என்ன என வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் என்னை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள் எனக்குறிப்பிட்ட அவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மக்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது பல இருக்கின்றன அதில் அவர்கள் அனைவரும் கூட்டாக விலகிய ஒற்றுமையும் ஒன்று, தங்களுக்குள் ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும் தங்கள் சமூகத்தை பாதிக்கின்ற விடயம் வருகின்ற போது அவர்கள் ஒன்று சேர்வார்கள் இது இங்கு மட்டும் அல்ல உலகம் முழுக்க காணகூடியதாக இருக்கிறது இதேவேளை தமிழர்களிடையே வேறுவிதமான குணம் காணப்படுகிறது. நாங்கள் மட்டும்தான் விடயங்களை தெரிந்தவர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரும் நடக்க முற்படுவதனால்தான் எங்களிடையே ஒற்றுமை தடைப்பட்டு இருக்கிறது. எனவே முஸ்லிம்களின் இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு தமிழர்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

#தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி  #சேர்ந்து செயற்படுவம்  #நம்பிக்கை #க.வி . விக்னேஸ்வரன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More