Home இந்தியாபீகாரில் மூளை காய்ச்சலால் 66 பேர் உயிரிழப்பு

பீகாரில் மூளை காய்ச்சலால் 66 பேர் உயிரிழப்பு

by admin


பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூளை காய்ச்சல் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பீகாரில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நோய் பரவி வருகின்ற நிலையில் இதன் தாக்கம் காரணமாக கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டிந்தது.

இந்தநிலையில் தற்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதனையடுத்து கடந்த சில நாட்காளக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.  கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் 117 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டு சிகிச்சை பெற்று வநதனர்.  இந்நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

#பீகார் #மூளை காய்ச்சல்  #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More