ஹொங்கொங்கில் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா, மக்கள் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்த ஹொங்கொங் 1997-ம் ஆண்டு முதல் சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறிய நிலையில் அது சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் கீழ் உள்ளது.
இந்த நிலையில், அங்கு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு மேற்கொள்ள ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்கொங் அரசு முடிவு செய்ததனையடுத்து அங்கு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் ,இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு தொடர்ந்து உறுதியாக இருந்ததனையடுத்து கடந்த 12ம் திகதி நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டிருந்தது. அத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த போராட்டக்காரர்கள் முடிவு செய்திருந்தநிலையில் குறித்த சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
எனினும் குறித்த மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
#hongkong #ஹொங்கொங் #மசோதா #சீனா