நாட்டில் பயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் நாட்டில் பயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்தோடு ஆடை சுற்றறிக்கை தொடர்பாக கேள்விகளை எழுப்ப பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து அண்மையில் இடம்பெற்ற விசாரணையின்போது, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்னசிறியிடம் பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை செய்தமை குறித்த கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ஸ, உயிர்த்தஞாயிறு தாக்குதலின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்கவே குறித்த குழு அமைக்கப்பட்டதே அன்றி ஆடைகள் அணிவது தொடர்பான சுற்றறிக்கை தொடர்பாக கேள்விகளை எழுப்ப அமைக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.#மகிந்தராஜபக்ஸ #பயங்கரவாதம்