Home இலங்கைமுகநூல் ஊடாக களியாட்ட நிகழ்வு – போதை மாத்திரைகளுடன் 51 பேர் கைது..

முகநூல் ஊடாக களியாட்ட நிகழ்வு – போதை மாத்திரைகளுடன் 51 பேர் கைது..

by admin


இரத்தினபுரி கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பலாங்கொட, பெலிஹுல்ஒய பகுதியில் உள்ள விடுதி ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  நேற்று (16.06.19) மாலை 4.30 மணி அளவில் காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் இந்த விசேட சோதனையை நடத்தியுள்ளனர்.  இந்த சோதனையின் போது போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரிகைகள் வைத்திருந்தமை தொடர்பில் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வு ஒன்றின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது பிரகெப்லின் 20 மாத்திரைகள், 3 அப்பிள் மாத்திரை, 160 மில்லி கிராம் ஹெரோயின், 300 மில்லி கிராம் கொக்கெயின், 50 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 150 கிராம் கஞ்சாவை காவற்துறையினர் மீட்டுள்ளனர். #போதைப்பொருட்கள் #போதைமாத்திரிகைகள்  #விஷேடஅதிரடிப்படையினர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More