145
யாழ்.மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கற்றாளை பிடுங்கிய இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் கற்றாளைகள் பிடுங்கபடுவதாக ஊர்காவற்துறை காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் , விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். #யாழ்மண்கும்பான் #கற்றாளை
Spread the love