Home உலகம்ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ள டிரம்ப் பிரசாரத்தை முறைப்படி ஆரம்பித்துள்ளார்

ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ள டிரம்ப் பிரசாரத்தை முறைப்படி ஆரம்பித்துள்ளார்

by admin

அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்ப், அதற்கான பிரசாரத்தை முறைப்படி ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வென்று அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

டிரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2-வது முறையாக தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் டிரம்ப் முறைப்படி புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் ஆரம்பித்துள்ளார். சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக வளர்ச்சி பெற செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

#டொனால்ட் டிரம்ப் #வாக்குறுதி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More