Home இலங்கைமன்னாரில் 473 கிலோ பீடி சுற்றும் இலைகளுடன் ஒருவர் கைது

மன்னாரில் 473 கிலோ பீடி சுற்றும் இலைகளுடன் ஒருவர் கைது

by admin


மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 473 கிலோ 150 கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துiயினர் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நேற்று செவ்வாய்க்கிழமை(18) மாலை உதவி காவல்துறை பரிசோதகர் கீர்த்தி தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மன்னார் தோட்டவெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனையிட்ட போது 15 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 473 கிலோ 150 கிராம் நிறை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர். அத்துடன் ,குறித்த வீட்டில் இருந்த எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட பீடி சுற்றும் இலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#மன்னார் #பீடி சுற்றும் இலைகளுடன் #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More