குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மஹிந்த கூடவே இருந்து அவருடன் அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுகணமே மஹிந்தவை ஏமாற்றியது போல நல்லாட்சி எனும் பெயரில் எம்மோடு உறவாடி எம்மையும் ஏமாற்ற கூடும் என அவர் மீது எமக்கு ஐயம் உண்டு என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
நாளை 04ஆம் திகதி யாழ்ப்பாணம் வருவதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்ப்புக்கள் இல்லாத கடைசி யாழ் விஜயமாக இருக்கும். அதன் பின்னர் அவர் யாழ்ப்பாணம் வர விளைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரும் எனவும் எச்சரித்து உள்ளார்.
அத்துடன் மஹா நாயக்க தேரர்களின் ஆசீர்வாத்தோடுதான் அரசியல் தீர்வு என்றால் அவர்களோடே இருக்கட்டும் நாம் தேவையில்லை. அப்படியோ ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களின் தேவையின்றி ஆதரவின்றி வென்றிருக்கலாமே என தெரிவித்தார்.