முல்லைத்தீவு துணுக்காய் உயிலங்குளம் பகுதியில் உள்ள இந்திய மாதிரி வீட்டுத்திட்டத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக துணுக்கர் பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குஉட்பட்ட உயிலங்குளம் பகுதியில் கடந்;த 2012ம் ஆண்டு இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகள் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் வீடுகள் குறிப்பட்டகாலத்திற்குள் சேதமடைந்து மக்கள் குடியிருக்க முடியாத நிலையில் காணப்படுகின்றன.
மீள்குடியேற்றத்தின் பின்னர் பிரதேசத்தில் காணிகள் இன்றிக்காணப்பட்ட பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் , மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு தலா 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீடுகளில் குடியேற்றப்பட்டனர்.
எனினும் குறித்த வீடுகள் உரிய முறையில் அமைக்கப்படாமையினால் வீட்டின் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டும் கூரைகள் சேதமடைந்தும் ஆபத்தான நிலையில் காணப்பட்டன.இவ்வாறு சேதமடைந்த வீடுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது குறித்த குடியிருப்பில் உள்ள சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் துணுக்காய் பிரதேச செயலரை தொடர்பு கொண்டுவினவியபோது உயிலங்குளம் இந்திய மாதிரிவீட்டுத்திட்டம் தொடர்பில் மாவட்டச்செயலகத்தில் இருந்து வருகை தந்த குழுவினரால் பார்வையிட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்;பட்டிருந்தன.
தற்போது தேசிய வீடமைப்பு அதிகார சபையில் வீட்டுத்திட்டத்தில் இந்த பிரதேசத்தில் 28 பயனாளிகள் தெரிவு செய்யப்;பட்டு சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். #முல்லைத்தீவு #உயிலங்குளம் #மாதிரி வீட்டுத்திட்ட #புதிய வீடுகள்
சுப்ரமணியம் பாஸ்கரன்