Home இலங்கைகல்முனையில் உண்ணாவிரதத்தில் இருப்போரின் நிலை மோசம் :

கல்முனையில் உண்ணாவிரதத்தில் இருப்போரின் நிலை மோசம் :

by admin



கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை ஆபத்தாக இருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சோதனை நடத்திய பின்னரே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சீனி குறைந்து வருவதாகவும் இந்நிலை தொடர்ந்ததால் உயிராபத்து ஏற்படலாம் எனவும் உடனடியாக வைத்தியாசாலையில் அனுமதிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களின் கோரிக்கை இன்றைய தினம் நிறைவேற்றப்படுமென ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#கல்முனை #உண்ணாவிரதத்தில் #மோசம் 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More