சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டி நகரை விரிவுபடுத்தும் திட்டத்தை அமைப்பதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை பெறுவது சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் கலாநிதி ஹிரோத்தோ இசுமிக்கும் (Dr Hiroto Izumi) இடையில் நேற்று (21.06.19) அலரிமாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையில் முதலீட்டு திட்டங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் தெளிவுபடுத்தினார்.
ஜப்பானின் சரித்திர முக்கியத்துவம் மிக்க ஹியோத்தோ நகரை, அதன் பாரம்பரிய மரபுரிமைகளை பாதுகாத்து நவீன மயப்படுத்தியதுபோல், கண்டி நகரை விரிவுபடுத்தும் வேலைத் திட்டத்தையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு சகல சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஜப்பான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் இச்சந்திப்பின்போது தெரிவித்தார். #கண்டிநகர் #ரணில்விக்ரமசிங்க #ஜப்பான்
அரச தகவல் திணைக்களம்