இங்கிலாந்தில் நடைபெற்ற பேர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டியில் 2-ம் நிலை வீராங்கனையான அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ஜெர்மனியின் ஜூலியா கோர்ஜசை வென்று சாதனை படைத்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஷ்லி பார்டி 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜூலியா கோர்ஜசை வென்றதன் மூலம் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் சம்பியனான 23 வயதான ஆஷ்லி பார்டி இந்த வெற்றியினை தொடர்ந்து இன்று வெளியாகவுள்ள புதிய தரவரிசை பட்டியலில் அதிகாரபூர்வமாக பெண்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளமை அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து இதுவரை முதலிடத்தில் இருந்த ஜப்பானின் நவோமி ஒசாகா 2-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார்.
பெண்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஒருவரமுதலாம் இடத்தை பிடிப்பது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது
#டென்னிஸ் தரவரிசை #ஆஷ்லி பார்டி #சாதனை #நவோமி ஒசாகா