உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் இன்று முன்னிலையாக உள்ளனர்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று பகல் 2 மணி அளவில் தெரிவுக்குழு கூடவுள்ள நிலையில் அதற்கான அறிவித்தல் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். மேலும் இன்று இடம்பெறவுள்ள சாட்சி விசாரணை வழமைபோன்று ஊடகங்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். #உயிர்த்தஞாயிறுதாக்குதல் #பாராளுமன்ற தெரிவுக்குழு #ரிஷாத்பதியுதீன் #மகேஷ்சேனாநாயக்க #தெரிவுக்குழு