இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் அனாதைகளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகளில் 258 பேர் உயிரிழந்திருந்ததுடன் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதிகள் சிலர் காவற்துறையினரின் சுற்றிவளைப்பில் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிககமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்தக் குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த குழந்தைகள் இயல்பு நிலையை எட்டுவதற்கான பணிகளில் தேவாலயம் கவனம் செலுத்துகிறது என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். #தொடர்குண்டுவெடிப்புகள் #குழந்தைகள் #அனாதைகள்