அமெரிக்காவுக்கு செல்லும்போது ரியோ கிராண்டே நதியில் தந்தை – மகள் மூழ்கியதை அடுத்து, இதுபோன்று உயிரை பணயம் வைத்து எல்லையை கடக்க வேண்டாம் என எல் சல்வேடார் அரசாங்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது .தந்தையும் அவரது 23 மாத மகளும் அந்த நதியில் மூழ்கியவாறு வெளியான புகைப்படம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை தடுக்க, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் கடுமையான கொள்கைகளை அமுல்படுத்தியுள்ளதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அண்மைய நாட்களில் மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உயிரிழந்தவர்களில் பலர் மத்திய அமெரிக்கா பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹாண்டுரூஸ், குவாட்டமாலா மற்றும் எல் சல்வேடார் பகுதிகளில் நிலவும் வன்முறை மற்றும் வறுமை காரணமாக, அங்கிருந்து வெளியேறும் மக்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரிவருகின்றனர். இதேவேளை குடியேற்றம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான நிலைப்பாடே குடியேறிகள் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள காரணம் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது குடும்பம் கடந்த இரண்டு மாதங்களாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் விசாவில் மெக்ஸிகோவில் இருந்ததாக தெரிவித்த உயிரிழந்தவரின் 21 வயது மனைவி அமெரிக்க அதிகாரிகளை எதிர்கொண்டு புகலிடம் கோர முடியாமல் விரக்தியடைந்த நிலையிலேயே இவ்வாறு நதியை கடந்து அமெரிக்கா செல்ல முடிவு செய்த நிலையில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் #உயிரை #பணயம் #எல்லையை #தந்தை – மகள் #வறுமை #புகலிடம்