கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழுள்ள முரசுமோட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாது, கமக்கார அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இரணைமடுக்குளத்தின் கீழுள்ள முரசுமோட்டை சேற்றுக்கண்டி மருதங்குளம் புலிங்கதேவன் முறிப்பு ஆகிய பகுதிகளில் பயிர்ச் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு உரியவாறு நீர் வழங்ப்படாது அப்பிரதேசத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இரவு வேளைகளில் பிரதான நீர் விநியோக வாய்க்கால்களை சட்டத்திற்கு மாறாக மறித்து நீர்ப்பாசனம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அளவுக்கு அதிகமான நீர் குறிப்பிட்ட சில நீர் விநியோக வாய்க்கால்களில்வாக்களினுடாக வீண்விரயமாகி கழிவு வாய்க்கால் ஊடாக வெளியேறிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையில் உரிய நீர் விநியோகத்திற்கான முகாமைத்துவம் இன்மையால் அதிகமான விவசாயிகள் நீர் விநியோகம் செய்ய முடியாது நீர்ப்பாசனம் செய்ய முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குறிப்பிட்ட சில விவசாயிகள் தங்களுடைய பயிர்களை கைவிடுகின்ற நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது. #கிளிநொச்சி #இரணைமடுக்குளம் #முரசுமோட்டை #நீர்விநியோகம் #இரணைமடுக்குளம்,