Home இந்தியாபுனேயில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து – 15 பேர் பலி

புனேயில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து – 15 பேர் பலி

by admin

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அடுக்குமாடி குடியிருப்பின் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் சுற்றுச்சுவரை ஒட்டி பள்ளத்தில் அமைந்திருந்த குடிசைகள் மீது 60 அடி நீள சுவர் விழுந்ததால் குடிசைகள் சேதமடைந்துள்ளதுடன் சுற்றுச்சுவரை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த கார்களும் பள்ளத்தில் விழுந்துள்ளனர். இதனால், குடிசைகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ; மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் குடிசைகளில் வசித்த மக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எ னத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பலத்த மழை பெய்ததால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகவும், இதன்மூலம் அந்த சுற்றுச்சுவரை கட்டிய கட்டுமான நிறுவனம் அலட்சியமாக பணி செய்திருப்பது தெரிய வந்திருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.  #புனே #அடுக்குமாடி #சுற்றுச்சுவர்  #விபத்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More