காவல்துறையினருக்கெதிரான பொதுமக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு புதிய இணையத்தளம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. www.npc.gov.lk என்பதே அந்த முகவரியாகும். இதன் மூலம் பொது மக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த இணையத்தள அறிமுக நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றது.
எழுத்து மூலமாகவும் வாய் மூலமாகவும் காணொளி மூலமாகவும் இந்த இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை செய்ய முடியும் வகையில் தற்பொழுது தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் இணையத்தளம் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தாம் செய்த முறைபாடு தொடர்பில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை கண்டறியவும் முடியும் எனவும் முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் பொழுது கணணியின் ஊடாக வழங்கப்படும் குறியீட்டை 1960 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு ; இதனை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #காவல்துறையினருக்கெதிரான #முறைப்பாட்டை #புதிய #இணையத்தளம்