இந்திய – பசிபிக் கடல் மண்டலத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணிக்கும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டணத்தில் கிழக்குக் கடற்படை அதிகாரிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி போதோ இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்டை நாடான சீனா எப்போதும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதனால் கடல்சார் பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக தெரிவித்த அவர் தமது கடற்படை மேலும் வலுவடையும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலையும், கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடல், தென்சீனக் கடலை உள்ளடக்கிய இந்திய – பசிபிக் மண்டலத்தில் சீனா தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. முழு தென்சீனக் கடலையும் சீனா உரிமை கோரி வருகின்ற நிலையில் அதற்கு எதிராக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே, தாய்வான் ஆகிய நாடுகளும் தென்சீனக் கடலில் உரிமை கோரி வருகின்றன. இந்த நிலையில், சீனாவின் செயல்பாடுகளை இந்தியாவும் கண்காணிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. #சீனா #இந்தியக் #கடற்படை #பதற்றம் #ராஜ்நாத் சிங்