சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் மேற்கொண்ட போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்நாட்டு அரச ஊடகம் வெளியட்டுள்ள செய்தியின் பிரகாரம் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 181 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு பின்னர் சூடானில் பதற்றம் நிலவி வருகிறது.சூடானை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒமர் அல்-பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தமையினை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியிருந்தது.
ஜனநாயக முறையில் புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும் என ராணுவம் அறிவித்த நிலையில் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த 1989-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் திகதியன்று சூடானில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக ஒமர் அல் பஷீர் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #சூடானில் #ராணுவ ஆட்சி #மக்கள் #போராட்டத்தில் #உயிரிழந்துள்ளனர் #ஜனநாயக