Home இலங்கைமரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்துக்கெதிராக 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்துக்கெதிராக 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

by admin


மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கெதிராக 10 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணி, பேராசிரியர் சீ. குணரத்ன, கலாநிதி கே சேனரத்ன மற்றும் வெலிகட சிறைச்சாலையிலுள்ள் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சிலர் சட்டத்தரணிகள் ஊடாக குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், நீதி அமைச்சர், நீதிமன்ற அமைச்சின் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர், வெலிகட சிறைச்சாலை கண்காணிப்பாளர் உட்பட பல தரப்பினரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு மாத்திரம் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தின் ஊடாக அரசியலமைப்பின் 12 (1) ஆம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்படுவதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். #மரண தண்டனை #தீர்மானத்துக்கெதிராக #அடிப்படை உரிமை மீறல் #மனுக்கள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More