சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குழந்தை உட்பட அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலியானதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருவதாக தெரிவித்து அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலியானதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் நகரங்களில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியதில் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டள்ளதுடன் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் 6 ஏவுகணைகள் நடுவழியிலேயே இடைமறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டதாகவும் இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #சிரியா #இஸ்ரேல் #ஏவுகணை ,