அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் உறுதியாக உள்ள டிரம்ப் முன்னர் அதனை பிற்போட்டிருந்த போதும் தற்போது அந்த நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்பட்டு விடும் என அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலிலேயே டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிவித்த அவர் பல்லாண்டு காலமாக சட்ட விரோதமாக குடியேறிய மக்களைத்தான் தாங்கள் வெளியேற்றுpன்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு புலம் பெயர்ந்தோர் உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பொதுவான அச்சுறுத்தல் சமூகங்களுக்கும், அமெரிக்க பொருளாதாரத்துக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ள புலம் பெயர்ந்தோர் உரிமை குழுக்கள் பெரியவர்கள் வேலைகளை இழக்கவும், குழந்தைகள் பாடசாலைகளை தவிர்க்கும் சூழலும் உருவாகும் எனத் தெரிவித்துள்ளன. #அமெரிக்கா #சட்ட விரோதமாக #குடியேறியவர்கள் #வெளியேற்றப்படுவர் #டிரம்ப்