தஞ்சை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து இன்று காலை கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கொண்டு வந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும் எனத் தெரிவித்து இவ்வாறு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பல இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து இன்று காலை கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இணைந்து திடீர் மறியல் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும். காவிரி படுகை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், சட்டசபை கூட்டத்தொடரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாணவர்கள் கோசமிட்டவாறு போராட்டம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.#தஞ்சை #ஹைட்ரோ கார்பன் #மாணவர்கள் #போராட்டம்