Home இலங்கைவீதியை மறித்து போடப்பட்ட கற்களால் பொதுமக்களுக்கு அசௌகரியம்….

வீதியை மறித்து போடப்பட்ட கற்களால் பொதுமக்களுக்கு அசௌகரியம்….

by admin

பாறுக் ஷிஹான்

வீதியை மறித்து போடப்பட்ட கற்களால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதுடன் இன்னும் எதுவித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. செவ்வாய்க்கிழமை(9) காலை 10.30 மணி முதல் புதன் கிழமை (10) வரை கல்முனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை மதிரிஸா வீதியில் கம்பெரலிய அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் குறித்த கற்கள் சட்டவிரோதமாக வீதிகளில் கொட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக இவ்வீதியில் பயணிப்பவர்கள் மாற்று பாதை ஏதும் இன்றி போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவ்விடயம் குறித்து காவற்துறையினர் அவசர பிரிவிற்கு அழைப்புகளை பொதுமக்களில் சிலர் இவ்விடயம் தொடர்பாக அறிவித்த நிலையிலும் இரவு குறித்த இடத்திற்கு காவற்துறையினர்  சென்றிருந்தனர்

இப்பிரச்சினை தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவற்துறையினர் கிராம சேவகரை அழைத்து கற்களை கொட்டியவர் தொடர்பாக விபரங்களை பெற்றதுடன் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர்.

இதுவரை இவ்வீதி அப்படியே கற்கள் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கின்றன.இவ் அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ளும் அரசியல் கட்சி மௌனமாக இருப்பதுடன் கற்களை கொட்டியதாக கூறப்படடும் ஒப்பந்த காரர் தலைமறைவாகி உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More