காவிரி மேலாண்மை ஆணையகத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். காவிரியில் தமிழகத்துக்கு சுமார் 9 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையகம் உத்தரவிட்டிருந்த போதிலும் கர்நாடக அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை எனத் தெரிவித்து அம் மாநில அரசு தண்ணீரை திறக்க மறுத்திருந்தது.
இந்தநிலையில் தற்போது காவிரி உற்பத்தியாகும் குடகு மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதனால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையகத்தின் உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முதமைச்சர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.
மண்டியா விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் நோக்கத்திலும், தமிழகம் பயன்பெறும் வகையிலும் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு ஒப்புக்கொள்கிறது. காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையகத்தின் அனுமதியை பெறும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #தமிழகத்துக்கு #காவிரி #தண்ணீர் #கர்நாடகா #ஒப்புதல்