Home இலங்கைவாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்றுக் கொடு – ஹட்டனில் கையெழுத்து வேட்டை

வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்றுக் கொடு – ஹட்டனில் கையெழுத்து வேட்டை

by admin

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்றுக் கொடு என கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது. இன்று (12.07.2019) காலை ஹட்டன் நகர மத்தியில் இக் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

தோட்டதொழிலாளர்களின்கோரிக்கையினைநிறைவேற்றாதாஅரசாங்கத்தைவீட்டுக்குஅனுப்புவதற்குதோட்டதொழிலாளர்கள்முன்வரவேண்டும்என கோரி மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள மலையக அமைச்சர்கள் தொழிலாளர்களுக்கு பாதீட்டில் பெற்று தருவதாக கூறிய 50 ரூபாவை இதுவரை வழங்க முடியாமல் வக்கத்து போயிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் இதனை உடனடியாக பெற்றுக் கொடுக்கும்படி அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50ரூபாவினை வழங்குவதாக கூறிய அரசாங்கம் இதுவரை 50சதத்தை கூட வழங்கவில்லை. தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் பெற்று கொடுக்க புதிய ஒரு அமைப்பை கட்டி எழுப்பவேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதன்போது 100ற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டமை குறிப்பிடதக்கது.  #வாக்குறுதி  #பெற்றுக் கொடு #ஹட்டனில் #கையெழுத்து #வேட்டை #மக்கள் விடுதலை முன்னணி

(க.கிஷாந்தன்)

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More