ஈரான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்றையதினம் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்
நேற்று வியாழக்கிழமை ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே நெருங்கி அச்சுறுத்தும் வகையில் ஈரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்ததாகவும் உடனடியாக அந்த விமானத்தை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் எச்சரிக்கையை புறக்கணித்து ஈரான் விமானம் வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்
அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறாக செயல்படும் ஈரானுக்கு அனைத்து நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை தங்கள் நாட்டின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்தி குறித்து தங்களிடம் எந்த தகவலும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. #ஈரான் #ஆளில்லா விமானத்தை #சுட்டு #அமெரிக்கா #iran #drone